முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டையர் டென்னிஸில் சானியா - சாகேத்-க்கு தங்கம்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியான், செப்.30 - ஆசிய விளையாட்டுபோட்டி இந்தியா 5-வது தங்கப்பதக்கம் வென்றது. வட்டு எறிதலில் சீமா பூனியா தங்கம் வென்றார். கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-சாகேத் ஜோடி தங்கம் வென்றனர். ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

இறுதிச் சுற்றில் 61.03மீ தூரம் வட்டு எறிந்து முதலிடம் பெற்றதால் தங்கம் வென்றார் சீமா பூனியா. மகளிர் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் 60மீ தூரத்தைக் கடந்த ஒரே வீராங்கனையாக சீமா பூனியா திகழ்ந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை கிருஷ்ணா பூனியா 55.57மீ தூரம் விட்டெறிந்து 4வது இடத்தில் முடிந்தார். சீமா பூனியாவின் சாதனை என்னவெனில் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்த்த சீன வீராங்கனைகளை விஞ்சியதே. இரு சீன வீராங்கனைகளும் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கமே வெல்ல முடிந்தது.

கலப்பு இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சைனீஸ் தைபே ஜோடியான சியென் யின் பெங்- ஹோ சிங் சான் ஜோடியை சானியா-சாகேத் ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.
முதல் செட்டில் 4-3 என்று முன்னிலை பெற்ற சானியா-சாகேத் ஜோடி பிறகு 6-4 என்று அந்த செட்டைக் கைப்பற்றினர். 2வது செட்டில் ஒரு பிரேக் கொடுத்து 2-1 என்று முன்னிலை பெற்றிருந்தது சானியா-சாகேத் ஜோடி ஆனால் அடுத்த சர்வை சைனீஸ் தைபே ஜோடி முறியடித்து 2-2 என்று சமன் செய்தது. 3-3 என்ற நிலையில் மீண்டும் சானியா சாகேத் ஜோடி சைனீஸ் தைபே ஜோடியின் சர்வை முறியடித்து 4-3 என்று முன்னிலை பெற்றது. அதன் பிறகு தங்கள் சர்வை சைனீஸ் தைபே ஜோடி வெல்ல முடியாமல் போனது. சானியா-சாகேத் 2வது செட்டையும் 6-3 என்று கைப்பற்றினர். இது இந்தியாவுக்கு நடப்பு ஆசியப் போட்டிகளில் 6-வது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்சியானில் நேற்று நடைபெற்ற இரட்டையர் இறுதிப் போட்டியில் தென் கொரியாவுடன் மோதிய இந்திய இரட்டையர் ஜோடியான சாகேத் சாய் மைனேனி மற்றும் சனம் கிருஷண் சிங் ஆகியோர் 5-7, 6-7, என்ற செட் கணக்கில் தோல்வி தழுவினர். இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
தென் கொரிய இரட்டையர் வீரர்களான லிம் யோங்க்யூ, சங் ஹையான் ஜோடி தங்கம் வென்றது. தென்கொரிய ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் உற்சாகமாக ஆடிய தென்கொரிய வீரர்கள் 'டிராப் வாலி'-யில் சிறப்பாகத் திகழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்