முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் சேதத்தை பார்க்க முடியாமல் திரும்பிய பவன்கல்யாண்

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

நகரி, அக் 17 - முன்னாள் மத்திய மந்திரி சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினத்தில் சோகத்தில் இருக்கும் மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூற நடிகர் பவன்கல்யாண் திட்டமிட்டார். இதற்காக நேற்று முன்தினம் விசாகப்பட்டினம் சென்றார். அவரை பார்த்ததும் அங்குள்ள மக்கள் பண்டிகையை கொண்டாடுவது போல் ஆரவாரம் செய்தனர். அவரை பார்க்க முண்டியடித்தனர். பவன்கல்யாணுக்கு பாதுகாப்பு அளிப்பதில் போலீசார் சிரமப்பட்டனர். இதனால் விரக்தியடைந்த பவன்கல்யாண் புயல் சேதத்தை பார்க்க முடியாமல் உடனடியாக திரும்பினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விசாகப்பட்டினம் சென்றேன். துடப்பத்தை கையில் எடுத்து சின்னாபின்னமாகி கிடந்த நகரை சுத்தம் செய்ய நினைத்தேன். ஆனால் மக்கள் என்னை வினோதமாக பார்த்தனர். என்ன வேடிக்கை பார்க்க திரண்டு விட்டனர். எனக்கு பாதுகாப்பு அளிப்பதில் தான் போலீசார் முனைப்பு காட்ட வேண்டியதாகி விட்டது. எனது வருகையால் மீட்பு பணி பாதிக்கப்பட்டது. இதனால் புயல் சேதங்களை பார்க்க முடியாமல் திரும்பி விட்டேன். ஒரு நடிகராக இருப்பதால் உள்ள வேதனையை உணருகிறேன். நடிகராக இருப்பதால் வெட்கப்படுகிறேன். புயல் நிவாரணமாக ரூ. 50 ஆயிரம் மட்டுமே அனுப்ப முடிந்தது. இருந்த போதிலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியை செய்ய எனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். குறைந்தபட்சம் ஒருவருக்கு அரை லிட்டர் பால், அரை லிட்டர் குடிநீராவது கொடுங்கள் என்று கூறியுள்ளேன். நான் பார்த்த விசாகப்பட்டினத்தின் அவல நிலையை பார்க்க கஷ்டமாக உள்ளது. அது எப்போது பழைய நிலையை அடையும் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்