முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

தர்மசாலா, அக்.19 - தரம்சலாவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
இடையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் தொடரைக் கைவிடுவதாக தங்கள் தரப்பில் தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தது குழப்பத்தை விளைவித்துள்ளது. ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் தொலைக்காட்சியில் இந்தியா தொடரை 2-1 என்று வென்றதாகவே காண்பிக்கப்பட்டது.
331 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய மேற்கிந்திய அணியில் மர்லான் சாமுயெல்ஸ் அபாரமாக விளையாடி 112 ரன்களை எடுத்தாலும் அந்த அணி 48.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது. தொடக்கத்தில் புவனேஷ், உமேஷ் யாதவ் மேற்கிந்திய அணியின் ரன்களை முடக்கினர். 11 ஓவர்களில் மே.இ.தீவுகள் 27 ரன்களை மட்டுமே எடுத்து டிவைன் ஸ்மித், பொலார்ட் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

டேரன் பிராவோ, சாமுயெல்ஸ் இணைந்து ஸ்கோரை 83 ரன்களுக்கு உயர்த்தினர். ஆனாலும் 56 ரன்களை இருவரும் 9 ஓவர்களிலேயே எடுக்க முடிந்தது. டேரன் பிராவோ 40 ரன்கள் எடுத்து அக்‌ஷர் படேலின் அட்டகாசமான பந்துக்கு பவுல்டு ஆனார். ஆட்டத்தின் 28வது ஓவரில் ரவீந்தர் ஜடேஜா ராம்தின் (9), டிவைன் பிராவோ (0) விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் மேற்கிந்திய அணி பின்னடைவைச் சந்தித்தது. 28வது ஓவரில் அந்த அணி 121/5 என்று சரிவு கண்டது. சமியும் சாமுயெல்ஸும் இணைந்து ஸ்கோரை 165 ரன்களுக்கு உயர்த்திய போது 16 ரன்கள் எடுத்த சாமியை அக்‌ஷர் படேல் மீண்டும் ஒரு அசத்தல் பந்தில் தானே கேட்ச் பிடித்த் வீழ்த்தினார்.
அதன் பிறகுதான் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தொடங்கியது, ஆந்த்ரே ரசல் களமிறங்கி காட்டு காட்டென்று காட்டினார். அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்களை எடுக்க, ஜடேஜா வாங்கிக் கட்டிக் கொண்டார். இருவரும் ஜடேஜாவை சாத்தி எடுத்தனர். அதனால் 39 பந்துகளில் 57 ரன்கள் விளாசப்பட்டது. 41வது ஓவரில் 222 ரன்களை எட்டியபோது ஆந்த்ரே ரசலை, உமேஷ் யாதவ் பவுல்டு செய்தார். அதன் பிறகே சாமுயெல்ஸிற்கு பக்கபலமாக விளையாட வீரர்கள் இல்லை. சாமுயெல்ஸ் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 106 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து கடைசியாக ஷமி பந்தில் பவுல்டு ஆனார்.
இந்திய தரப்பில் புவனேஷ் குமார் 10 ஓவர்கள் 25 ரன்கள் 2 விக்கெட், அக்‌ஷர் படேல் 10 ஓவர் 1 மைடன் 2 விக்கெட்டுகள் 26 ரன்கள். இருவரும் அபாரமாக வீசினர். தோனி கடைசியில் கூறியது போல் இவர்களது கட்டுப்படுத்தல் மற்றும் விக்கெட் வீழ்த்துதலினால் மேற்கிந்திய அணியை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.
ஜடேஜாவின் ஒருநாள் போட்டிகளின் காலம் எண்ணப்படக்கூடியதாக மாறிவிட்டது எனலாம். 9 ஓவர்களில் 80 ரன்கள் கொடுத்தார் அவர். ஷமியும் 72 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்