முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா விடுதலைக்காக யாகம்: மாணவர்களுக்கு புத்தாடை

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், அக் 21 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை பெற வேண்டி திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் யாகம் நடத்திய பாடசாலை மாணவர்களுனக்கு மேயர் ராஜன் செல்லப்பா புத்தாடை வழங்கினார்.

ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாக வேண்டி மதுரை மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் கடந்த 16ம் தேதி மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் திருப்பரங்குன்றத்தில் மகாசிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதையடுத்து ஜெயலலிதாவுக்கு 17ம் தேதி ஜாமீன் கிடைத்தது.

ஞாயிற்று கிழமை காலை திருப்பரங்குன்றம் கோயிலில் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜையும், யாகசாலை பூஜைகளையும் செய்த சிவாச்சார்யார்கள் மற்றும் வேதசிவாகம பாடசாலை மாணவர்கள் 240 பேருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புத்தாடை வழங்குதல், நிகழ்ச்சி நடைபெற்றது. பாடசாலை மாணவர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சிக்கு மேயர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மராஜ், சுகாதார குழு தலைவர் முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ சீனிவேல், ஒன்றிய செயலர் சுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துக்குமார், நாகலெட்சுமி பாண்டுரெங்கன், கூட்டுறவு சங்க தலைவர் பாலமுருகன், பன்னீர் செல்வம், பாலமுருகன், முருகேசன், பேரவை ஒன்றிய துணை தலைவர் நிலையூர் முருகன், அரசு வழக்கறிஞர் ரமேஷ், கூட்டுறவு சங்க துணை தலைவர் நாகராஜன், அவனியாபுரம் நகர செயலாளர் ராமமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்