முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருள்கள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை: அக். 21 -  மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழக மக்கள் அனைவரும் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொது விநியோகத் திட்டப் பொருள்கள் அனைத்தும் நியாய விலை அங்காடிகளில் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்திட நேற்று (20.10.2014) அன்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், சென்னை, நந்தனம், அமுதம் நியாய விலை அங்காடிகள், 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை அங்காடி, அமுதம் பல்பொருள் சிறப்பு அங்காடி, பண்ணைப் பசுமை நுகர்வோர் அங்காடி ஆகியவற்றை ஆய்வு செய்தார். 
     வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ள அங்காடிகளுக்கு கொண்டு செல்லப்படும் பொருள்கள், மழைநீரில்  நனைந்து சேதம் அடைந்து விடாமல் உரிய தரத்துடன் விநியோகம் செய்யப்பட வேண்டுமென்றும், முன்னுரிமை அடிப்படையில் தேவையான மண்ணெண்ணெய்யை உரியவர்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
      ஆய்வின் போது, அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட விலையில்லா அரிசியின் தரம், எடை, ஆகியவற்றை பரிசோதித்தார்.  மானிய விலையில் சர்க்கரை, கோதுமை, ஆகியவை சீரான முறையில் வழங்கப்படுவதையும், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ்          துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை முழுமையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் விடுதலின்றி பெற்றுக் கொள்வதையும் நேரில் கண்டறிந்தார். 
    குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி 19.10.2014 ஞாயிறு அன்று அனைத்து அங்காடிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டதால், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை எவ்வித சிரமமுமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது என, மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.  அனைத்து கூட்டுறவு மற்றும் அமுதம் நியாய விலை அங்காடிகளிலும் போதுமான தேவையான அளவில் பொருள்கள் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். 
      20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுவதை ஆய்வு செய்த அமைச்சரிடம், அரிசியின் தரம் நன்றாக இருப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 85,000 குவிண்டால் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. பண்ணைப் பசுமை நுகர்வோர் அங்காடியில், தரமான காய்கறிகள், நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுவதையும் அமைச்சர் ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின் போது அரசு உணவுத்துறை முதன்மை செயலாளர்.எம்.பி.நிர்மலா, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர்.சூ.கோபாலகிருஷ்ணன்,., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர்.எம்.சந்திரசேகரன்,., மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்