முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதம் அடிப்பதில் சச்சின் சாதனையை முறியடித்த கோஹ்லி!

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, அக்.21 - தர்மசாலாவில் மே.இ.தீவுகளுடன் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய வீரர் விராட் கோஹ்லி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் ஒரு முக்கிய சாதனையை முறியடித்துள்ளார்.

இளம் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி திறமையானவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும் இங்கிலாந்து டூரில் சரியாக விளையாடாத கோஹ்லி விமர்சனத்துக்கு ஆளானார். ஆயினும் அவரை விட்டுக்கொடுக்காத கேப்டன் டோணி, அணியிலேயே தொடரச் செய்தார். இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சதம் அடித்து அசத்தினார் கோஹ்லி.

தர்மசாலாவில் நடந்த போட்டியில் 114 பந்துகளில் அவர் விளாசிய 127 ரன், கோஹ்லியின் 20வது சதமாகும். தனது 20வது சதத்தை அவர், 133 இன்னிங்சுகளில் (141 போட்டிகள்) விளையாடி பெற்றுள்ளார். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் 197வது இன்னிங்சில்தான் 20வது செஞ்சுரி அடித்தார்.

2008ம் ஆண்டு இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்த கோஹ்லி பல ரெக்கார்டுகளை உடைத்துக் கொண்டு வேகமாக முன்னேறி வருகிறார். இன்னும் 121 ரன்கள் சேர்த்தால், 6 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் பட்டியலிலும் கோஹ்லி இடம் பெறுவார். நவம்பரில் நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அந்த சாதனை நிகழ்த்தப்படும் என்று நம்பலாம்.

20 சதங்கள் மூலம், அதிக சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன்களில் கோஹ்லி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். சச்சின் 49 சதங்களுடன் இமாலய உயரத்தில் முதலிடத்திலும், கங்குலி 22 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். விராட் கோஹ்லி சதம் அடித்தால் அந்த போட்டியில் இந்தியா தோற்பது மிகவும் அரிது. 20 சதங்களில், 18 முறை இந்தியா வெற்றியே கண்டுள்ளது.

கோஹ்லி அடித்த சதங்கள் விவரம்:

2009- இலங்கைக்கு எதிராக முதலாவது சதம். எடுத்த ரன்கள் 107. 2010- வங்கதேசத்துக்கு எதிராக 102, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 118, நியூசிலாந்துக்கு எதிராக 105 ரன்கள். 2011- வங்கதேசத்துக்கு எதிராக 100, இங்கிலாந்துக்கு எதிராக 107 மற்றும் 112, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 117 ரன்கள் எடுத்துள்ளார். 2012- இலங்கைக்கு எதிராக 133 மற்றும் 108 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள், இலங்கைக்கு எதிராக 106 மற்றும் 128 ரன்கள்.

2013-மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 102 ரன்கள், ஜிம்பாப்வேக்கு எதிராக 115 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 மற்றும் 115 ரன்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago