முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது சேவை மையங்கள் மூலம் பெயர் சேர்க்கலாம்

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக் 22:

பொதுச் சேவை மையங்களை பயன்படுத்தி இணையதளம் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

இதற்காக தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இது குறித்து பிரவீண்குமார் வெளியிட்ட அறிவிப்பில்,

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளன. அதில் 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைபவர்கள் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்க்கலாம். ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பை அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மூலமாக பெயர் சேர்ப்பை மேற்கொள்ளும் போது விண்ணப்ப படிவங்களை விரைந்து பரிசீலிக்க அது உதவுவதுடன் துல்லியமான பதிவையும் உறுதி செய்கிறது. ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வசதியாக தமிழகத்தில் உள்ள இணையதள மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த மையங்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்றுள்ளன. இந்த மையங்கள் மூலமாக பெயர் சேர்ப்பு பணிகள் கட்டாயமாக மேற்கொள்ளப்படும்.

மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக தமிழகம் முழுவதும் உள்ள பொது சேவை மையங்களுடன் தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்பட அரசு துறைகளின் அலுவலகங்கள் செயல்படும் வளாகங்களில் இயங்கி வருகின்றன. சென்னை நகரில் தாலுகா அலுவலகங்களில் இந்த பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்யலாம்.

இணையதள மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சிறு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிரப்ப குறைந்தபட்சம் ரூ. 10ம், அதை பிரிண்ட் எடுக்க ரூ. 3 கட்டணமாக வசூலிக்கப்படும். இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலமாக பெயர் சேர்ப்பை இலவசமாக மேற்கொள்ளலாம் என்றார் பிரவீண்குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்