முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கு: விஐயகாந்த் மீதான விசாரணை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

விழுப்புரம் -அக்-22 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதவை அவதூறக பேசிய வழக்கில் விஐயகாந்த் மீதான வழக்கு விசாரணை நவம்பர்; 11-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சரோஜினி தேவி உத்தரவுயிட்டார்.

விழுப்புரத்தில் கடந்த 30.08.2012ம் தேதி தே.மு.தி.க சார்பில் அதன் தலைவரும் தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அவதூறாக பேசியதாக கூறி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பொன்சிவா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விஜயகாந்துக்கு விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டில் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தே.மு.தி.க சார்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மற்றும் காவல் துறையினரை அவதூறாக விமர்சனம் செய்து பேசியதாக அரசு வழக்கறிஞர் பொன்சிவா, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாவட்;ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணைக்கு 27-08-2014 அன்று விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

விசாரணை ஒத்திவைப்பு

இதற்கிடையில் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த, பிரேமலதா சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்தசாரதி, வெங்கேடசன், உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை ஐகோர்ட்டில் தனிதனியாக நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தனர் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரும் இவ்வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் தே.மு.தி.க வழக்கறிஞர்கள்; ஆஜராகி இவ்வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் 4 பேரும் நேரில் ஆஜராவதில் விலக்கு அளித்து சென்னை ஜகோர்ட்டில் உத்தரவிடப்பட்ட அந்த நகலை சமர்பித்து மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினி தேவி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் நவம்பர் 11-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்