முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக் 24 - தமிழகத்தில் கடந்த 18ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது. முக்கிய அணை மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து விட்டது.

இந்த நிலையில் அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை தொடர்ந்து பெய்தது. இந்த நிலையில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே மேகங்களின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் நல்ல மழை பெய்திருக்கிறது. நேற்றும் மேகங்களின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக சீர்காழி, திருவாரூர், ராமேஸ்வரம், தொண்டி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பெய்து இருக்கிறது. குன்னூரில் 3 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் குறைந்த அளவே மழை பெய்து இருக்கிறது. நுங்கம்பாக்கத்தில் 5.4 மி.மீ, விமான நிலையத்தில் 3.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்