முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் பலி

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக் 24 - நடிகர் விஜய் நடித்த கத்தி படம் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ரிலீசானது. இது போல கேரளாவிலும் ஏராளமான தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. தமிழகத்தை போல கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் படம் வெளியாகும் நாளில் தியேட்டர் முன்பு பிரம்மாண்ட கட்அவுட்டுகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைத்து கொண்டாடுவது வழக்கம். கத்தி படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியானதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து தியேட்டர்கள் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்காட்டை அடுத்த வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயபாரத் தியேட்டரில் நேற்று முன்தினம் கத்தி படம் வெளியானது. இதையொட்டி அப்பகுதி ரசிகர்கள் தியேட்டர் முன்பு விஜய்யின் பிரம்மாண்ட கட்அவுட் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் படம் முடிந்ததும் வடக்கஞ்சேரியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன்(28) என்ற ரசிகர் ஆர்வ மிகுதியில் கட்அவுட் மீது ஏறி அதற்கு பாலாபிஷேகம் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கட்அவுட்டில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் உன்னிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன உன்னிகிருஷ்ணன் வெல்டிங் தொழிலாளி ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்