முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் கறுப்பு பணம் வைத்திருப்போர் பெயர் பட்டியல்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 24 - வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இதனால் பல்வேறு கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

கருப்பு பண விவகாரம் சமீப காலமாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் குறிப்பாக சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதுக்கி வைத்திருப்போரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போர் பட்டியலை இந்தியா கோரியது. ஆனால் முதலில் அப்பட்டியலை வெளியிட தயக்கம் காட்டிய சுவிட்சர்லாந்து பிறகு சில நிபந்தனைகளின் பேரில் அந்த பட்டியலை கொடுக்க சம்மதித்தது. அதாவது, இது தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்போரின் பட்டியலை தருவதற்கு மட்டும் சுவிஸ் வங்கி ஒப்புக் கொண்டது. அதன்படி அந்த வழக்குகள் விசாரணைக்கு வரும் போது கருப்பு பண நபர்களின் பட்டியல் வெளியிடப்படும். வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

சுவிஸ் அரசாங்கம் தரப்போகும் இந்த பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் எம்பி உட்பட சிலரது பெயர்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த பட்டியல் விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனால் கருப்பு பணத்தை பதுக்கிவைத்திருப்போர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆனால் இது தொடர்பாக தாங்கள் அஞ்சப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்றும் காங்கிரஸ் கூறி வருகிறது. பட்டியலை வெளியிட்டால் அதில் எல்லா கட்சியினர் பெயரையும் வெளியிட தயாரா? என்றும் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்