முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராபர்ட் வதேரா நில பேரம்: அரியானா அரசு விசாரணை

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக்.24 - ராபர்ட் வதேரா மீதான நிலபேர புகாரை அரியானாவில் அமைய உள்ள புதிய அரசு விசாரிக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, அரியானா மாநிலத்தில் டிஎல்எப் நிறுவனத்துடன் சட்டவிரோதமாக நிலபேரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். பாஜவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்து வந்தது. வதேரா எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை; இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டால் அதை வரவேற்கிறோம் என காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

அரியானாவில் பாஜ ஆட்சி அமைந்ததால் , நிலபேர விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அரியானாவில் பாஜ அமோக வெற்றிபெற்று, முதல்வராக கட்டார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நிலபேர விவகாரம் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சூசகமாக தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்டி ஒன்றுக்குப பேட்டியளித்த அருண் ஜெட்லி கூறுகையில்: அரியானாவில் ராபர்ட் வதேராவுக்கும் டிஎல்எப் நிறுனத்துக்கும் இடையே நடைபெற்ற நிலபேரத்தில் பணம் கைமாறி உள்ளது. இது குறித்து புதிதாக அமைய உள்ள பாஜ அரசு விசாரணை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இது எதிர்பார்த்த ஒன்றுதான். ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டை முறையாகவும், உண்மையாகவும் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ராஜஸ்தானில் பாஜ ஆட்சி அமைத்து ஓராண்டாகியும் வதேரா மீது அம்மாநில அரசு சுமத்திய குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்