முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் வைகை அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

ஆண்டிபட்டி, அக் 25 - தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை மற்றும் முல்லைப் பெரியாறு பகுதிகளில் கடந்த மூன்று வருடங்களாக போதிய மழை இல்லாததால் அணைக்கு போதிய நீர் வரத்து இல்லை. இதனால் அணையின் மொத்த உயரமான 71 அடியில் நீர் தேக்கும் 70 அடி உயரத்தை கடந்த மூன்று வருடங்களாக எட்ட முடியவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு கடந்த சில நாட்களாக 2700 கன அடியில் இருந்து 3700 கன அடி வரை நீர்வரத்து உள்ளது. இதனால் கடந்த புதனன்று காலையில் 46.60 ஆக இருந்த நீர்மட்டம் நேற்று முன்தினம் காலையில் 48.60 அடியை எட்டி ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago