முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கில் குற்றப்பத்திரிகை

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக் 25 - பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேன் உட்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள முதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகையில் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உளவு பார்த்தது. கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் உட்பட மேலும் 6 பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜன் வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாத தடுப்பு சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஜாகீர் உசேன் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து முகமது சலீம், சிவபாலன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகம் ஆகியவற்றை தாக்கும் திட்டத்துடன் அந்த இடங்களை புகைப்படம் எடுத்து உளவு பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்