முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய ஆசிரியர் தேர்வு: தமிழகத்தில் 89 பேர் தேர்ச்சி

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக் 25 - மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழகத்தில் இருந்து எழுதிய மாணவர்களில் இரண்டு தாள்களையும் சேர்த்து வெறும் 89 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 5,767 பேர் எழுதினர்.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர் ஆவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கு சி.பி.எஸ்.இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த செப்டம்பர் 21ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது.

முதல் தாள் தேர்வை நாடு முழுவதும் 2 லட்சத்து 6 ஆயிரத்து 145 பேர் எழுதினர். இதில் 24,629 பேர் தேர்ச்சி பெற்றனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 54 ஆயிரத்து 2 68 பேர் எழுதினர். இதில் 12,843 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட வாரியாக இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 3,767 பேர் தேர்வை எழுதினர். இதில் முதல் தாள் தேர்வை 1,210 பேர் எழுதினர். முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 39 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 11 மாவட்டங்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இரண்டாம் தாள் எழுதிய 4,557 பேரில் 50 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதிலும் 11 மாவட்டங்களில் யாரும் தேர்ச்சி பெறவில்லை. வேலூர், விருதுநகர், திருவாரூர், நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் யாரும் தேர்ச்சி பெறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்