முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம்: இந்தியா உறுதி

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், அக் 25 - அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என்று ஐ.நா சபையில் இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.

ஐ.நா. பொது சபையில் ஆயுத ஒழிப்பு மற்றும் சர்வதேச அமைதி தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆயுத ஒழிப்பு மாநாட்டுக்கான நிரந்தர பிரதிநிதி டி.பி. வெங்கடேஷ் வர்மா கலந்து கொண்டு பேசியதாவது,

அணு ஆயுத பரவலை தடுக்கும் கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் அதில் பாரபட்சம் இருக்க கூடாது என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அணு ஆயுத விவகாரத்தை பொருத்தவரை எந்த நாட்டின் மீதும் இந்தியா முதலில் அணு ஆயுதங்களை பிரயோகப்படுத்தாது. அதே போல் அணு ஆயுதம் இல்லாத நாட்டின் மீதும் இந்தியா இத்தகைய தாக்குதலை நடத்தாது. இந்த இரண்டு விஷயங்களிலும் இந்தியா தெளிவாக உள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியாவை இணையும் படி வல்லரசு நாடுகள் கூறுவது ஒரு தலைபட்சமாக உள்ளது. இந்த விவகாரத்தில் அணு ஆயுதங்களை வைத்து கொள்வதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்சு, ரஷ்யா ஆகிய 5 நாடுகளுக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பதை பாரபட்சமான நடவடிக்கையாக இந்தியா கருதுகிறது. எனவே அணு ஆயுதமே இல்லாத நாடாக மாறி இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தை சர்வதேச அளவிலும் பாரபட்சமற்ற முறையிலும் ஆயுதம் இல்லாததை உறுதிப்படுத்தும் விதமாகவும் செயல்படுத்தினால் இந்தியா அதில் இணைய தயாராக உள்ளது. சர்வதேச அளவில் பாரபட்சமில்லாத முறை கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே அணு ஆயுத பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்றார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் 1970ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago