முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். வசமுள்ள எண்ணெய் கிணறுகளில் விமான தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ரூட், அக் 25 - சிரியாவில் இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் வான்வழி தாக்குதல் நிகழ்த்தினர்.

ஈராக்கை ஒட்டிய சிரியாவின் எல்லைப்புற மாகாணமான தீர்எஸ்ஸெளரில் இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாக சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு கூறியதாவது,

தீர் எல்ஸெளரிலுள்ள ஜாப்ரா எண்ணெய் கிணறுகளில் கூட்டுப்படை தாக்குதல் நிகழ்த்தியது. அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஒரு மாதத்துக்கு முன்பாக சிரியாவில் தொடங்கிய வான்வழி தாக்குதலில் இது வரை 553 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 464 பேர் ஐ.எஸ் பயங்கரவாதிகள். 57 பேர் அல்கொய்தாவோடு தொடர்புடைய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். எஞ்சிய 32 பேர் பொதுமக்கள். உயிரிழந்த பொதுமக்களில் ஆறு குழந்தைகளும் , ஐந்து பெண்களும் அடங்குவர் என எஸ்.ஓ.ஹெச்.ஆர். அமைப்பு தெரிவித்தது. ஜாப்ரா எண்ணெய் கிணறுகளில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுக்களும் உறுதி செய்தன. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மிக முக்கியமான நிதி ஆதாரமாக விளங்கி வரும் எண்ணெய் கிணறுகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப்படை ஏற்கனவே பலமுறை தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. எனினும் எண்ணெய் வயல்களை தாக்குவது பொதுமக்களின் கோபத்தை கிளறும் என்று கூறப்படுகிறது. எனவே ஐ.எஸ்.ஸூக்கு எதிரான போரில் நீண்ட கால நோக்கில் இந்த தாக்குதல்கள் எதிர்விளைவையே ஏற்படுத்தும் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்