முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை இந்தியா: மேரி கோமுக்கு பிரதமர் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

இம்பால், அக்.25 - தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்று இம்பாலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 2-ஆம் தேதி 'ஸ்வச் பாரத்' (தூய்மை இந்தியா) என்ற திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலதிபர் அனில் குமார் உட்பட 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை ஏற்ற அனில் அம்பானி மும்பை ரயில் நிலைய பகுதியை சுத்தம் செய்து, தனது சார்பில் மேலும் சில பிரபலங்கள் இணைய வேண்டும் என்று குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அனில் அம்பானியின் அழைப்பை ஏற்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தனது சொந்த ஊரான இம்பாலில் ஒரு பகுதியை தேர்வு செய்து சுத்தம் செய்தார்.

இந்த நிலையில், மேரி கோமின் இந்த முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேரி கோம் போன்றவர்களின் பங்களிப்பு, தூய்மை இந்தியா திட்டத்துக்கு மிகப் பெரிய தூண்டுதலாக அமையும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்