முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். அத்துமீறல்: 50 கிராமங்களில் தீபாவளி இல்லை

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, அக்.25 - ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் 2 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு மாவட்டத்தின் ஆர்னியா, சம்பா மாவட்டத்தின் ராம்கர் பகுதிகளில் சர்வதேச எல்லை அருகே அமைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது நேற்று முன்தினம் அதிகாலையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "ராம்கர், ஆர்னியா செக்டார்களில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக இந்திய ராணுவ வீரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் நமது தரப்பில் பொருள் மற்றும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை" என்றார்.

கடந்த 1-ம் தேதி முதல் பலமுறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். கடந்த 6-ம் தேதி ஆர்னியா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ரமேஷ் சந்தர் என்பவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த செவ்வாய்க் கிழமை உயிரிழந்தார். இதையடுத்து பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 95-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள னர். 113 கிராமங்களில் வசித்து வந்த 30 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர்.

வடமாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகளில் தீபங்களை ஏற்றி கொண்டாடினர். ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீபங்களை ஏற்ற வேண்டாம் என்று ராணுவம் அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக சமீப காலமாக பாகிஸ்தா னின் தாக்குதல் அதிகளவில் காணப் படும் சம்பா, கதுவா மாவட்டங் களில் உள்ள 50 கிராமங்களில் தீப விளக்குகளை ஏற்ற வேண்டாம் என்று கூறப்பட்டது. இதைய டுத்து, அங்குள்ள மக்கள் தீப விளக்குகளை ஏற்றவில்லை; பட்டாசும் வெடிக்க வில்லை.

தீப விளக்குகளின் ஒளியை பார்த்து, மக்களின் வசிப்பிடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் குறி வைத்துத் தாக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக இந்திய ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்