முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, அக்.25 - பிரபல நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார். அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

பழம்பெரும் திரைப்பட நடிகரும், "எஸ்.எஸ்.ஆர்." என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான "லட்சிய நடிகர்" எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 86-வது அகவையில் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். மேடை நாடகங்கள் மூலம் திரையுலகிற்குள் நுழைந்து, முதலில் சிறு சிறு கதா பாத்திரங்களை ஏற்று நடித்த திரு. எஸ். எஸ். ராஜேந்திரன் அவர்களுக்கு "முதலாளி" என்ற திரைப்படம் தான் முகவரி பெற்றுத் தந்தது. "குமுதம்", "சாரதா", "சிவகங்கை சீமை", "தை பிறந்தால் வழி பிறக்கும்" உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மூலம் தமிழக மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் திரு. எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள். தனது தெளிவான தமிழ் வசன உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ரசிகர்களால் "லட்சிய நடிகர்" என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள், தலைமுறை தாண்டி தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமைக்குரியவர். திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர். எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்த எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago