முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு கூடுதல் கட்டணம்: 41 ஆம்னி பஸ்களுக்கு நோட்டீசு

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 25 - தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.

தீபாவளி பண்டிகையை யொட்டி, பறக்கும் படையினரும், அதிகாரிகள் குழுவும் ஆம்னி பஸ்களில் திடீர் சோதனை நடத்தின. 17-ந்தேதி நடந்த ஆய்வின்போது 6 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல 18-ந்தேதி 9 ஆம்னி பஸ்களிலும், 19-ந் தேதி 6 பஸ்களிலும், 20-ந்தேதி 11 பஸ்களிலும், 21-ந்தேதி 9 பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டு பிடிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மொத்தம் 41 ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பயணிகளிடம் நடந்த விசாரணையின்போது அவர்கள் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் இது தெரிய வந்தது. இதையடுத்து இந்த 41 பஸ்களுக்கும் போக்குவரத்து துறை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

இதையடுத்து இந்த 41 ஆம்னி பஸ்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் இந்த பஸ்களுக்கு அபராதம் விதிப்பதா? அல்லது பஸ் உரிமத்தை ரத்து செய்வதா? என்பது முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்