முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 25 - தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் துறையின் கீழ், இதுவரை 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களை அரசு தோற்றுவித்து, அத்தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இத்தகைய அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலத்திட்டத்தின் மூலமாக கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மற்றும் விபத்து மரணம், விபத்து ஊனம் மற்றும் வயது முதிர்ந்த நிலையில் பாதுகாப்பிற்கென மாதாந்திர ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம் ஆகிய அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் . எஸ்.கோகுல இந்திரா கலந்து கொண்டு 108 அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ. 8.50 இலட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.டி.ஜி.வெங்கடேஷ் பாபு, எஸ்.ஆர். விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி. கவிதா ராமு, மாநகராட்சி உறுப்பினர் .சீமா பஷீர், தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சு.ரேவதி மற்றும் அரசு அலுவலர்கள் கலநது கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago