முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

மதுரை, அக் 30 - கத்தி திரைப்படத்தில் 2 ஜி வழக்கு குறித்து பேசசப்படும் வசனங்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளதால் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ஏழைக்கு நீதி என்ற அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான ஆர். ராமசுப்பிரமணியன் இந்த மனுவை மதுரை 6வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கத்தி திரைப்படத்தில் நடிகர் விஜய், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2 ஜி வழக்கை குறிப்பிட்டு அதில் ஊழல் நடந்துள்ளதாக வசனம் பேசுகிறார். இது நாட்டை பற்றியும், ஆட்சி செய்தவர்கள் பற்றியும் மோசமாக சித்தரிப்பதாக உள்ளது. தற்போது உள்ள அரசின் ஆதரவை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விஜய் இவ்வாறு வசனம் பேசியுள்ளார். இன்னும் தீர்ப்பு வெளிவராத வழக்கை பற்றி யாரும் விமர்சிக்க கூடாது. அதை மீறி நடிகர் விஜய் வசனம் பேசியிருப்பது இந்திய நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும். மேலும் இந்தியாவை ஊழல் நிறைந்த நாடு என்பது போல் சித்தரித்து பேசுவதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்தி இருக்கின்றனர். இது படத்தை பார்க்கும் பலருக்கும் மன வேதனை தருவதாக உள்ளது. மேற்படி செயல் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 500ன்படி தண்டிக்கத்தக்க செயலாகும். எனவே நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் படத்தை திரையிட்ட திரையரங்கு உரிமையாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இம்மனு மீதான விசாரணையை மாஜிஸ்திரேட் மாரீஸ்வரி வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்