முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொச்சியில் நடக்கும் காதல் முத்தம் போராட்டத்துக்கு ஆதரவு

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக் 31 - கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு காதல் ஜோடிகள் அதிகளவில் வருவார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு நடந்த ஒரு ஆடல், பாடல் நிகழ்ச்சியில் காதல் ஜோடிகள் வரம்பு மீறி ஈடுபட்டதாக புகார் கிளம்பியது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. இதை தொடர்ந்து பா.ஜ.க. இளைஞரணியினர் அந்த ஓட்டலில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களும் சூறையாடப்பட்டது. கலாச்சாரத்திற்கு எதிரான ஒழுக்கக் கேடான செயல்கள் அந்த ஓட்டலில் நடந்ததால் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் சிலர் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனமும் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு எதிராக கேரளாவை சேர்ந்த குறும்பட டைரக்டர் ராகுல் பசுபாலன் தலைமையில் பேஸ்புக் இணையதளத்தில் சுதந்திர சிந்தனையாளர் என்ற பெயரில் சமூக வலைதள ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். ஓட்டல் சூறையாடப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த செயல் சுதந்திரத்தை பறிக்கும் என்று கூறி அவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அதன்படிகொச்சி மரைன்டிரைவ் மைதானத்தில் வருகிற 2ம் தேதி கூட்டமாக ஆண், பெண்கள் திரண்டு பொது இடத்தில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு காதல் முத்தம் என்று அவர்கள் பெயரிட்டுள்ளனர். இதுபற்றி பேஸ்புக்கில் அவர்கள் அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு இணையதளத்தில் ஆதரவு பெருகி வருகிறது. இதுவரை 20 ஆயிரம் பேர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனுமதி கேட்டு கொச்சி போலீசில் குறும்பட இயக்குனர் ராசூல் பசுபாலன் மனு கொடுத்தார். ஆனால் இந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று போலீஸ் துணை கமிஷனர் அறிவித்துள்ளார். ஆனாலும் தங்களது போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ராசூல் அறிவித்துள்ளார். அதே சமயம் இந்த போராட்டத்தை நடத்த விட மாட்டோம் என்று விஸ்வ இந்து பரிசத் உட்பட சில இந்து அமைப்புகளும் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்ச்சை ஏற்பட்ட அந்த ஓட்டல் பகுதிக்கு ஒரு இளம்பெண் தலைமையில் சிலர் கையில் போஸ்டர்களுடன் வந்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட போஸ்டர் ஒட்டஅவர்கள் முயற்சி செய்தனர். இதனை சிலர் தடுத்ததால் மோதல் உண்டாகும் சூழல் உருவானது. உடனே போலீசார் அங்கு சென்று சமரச பேச்சு நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago