முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீனம் - காஸாவுக்கு மலாலா ரூ.30 லட்சம் நன்கொடை

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

ஜெருசலேம், அக் 31 - இஸ்ரேல் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட காஸாவுக்கு மலாலா ரூ . 30 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பாலஸ்தீ னத்தில் கமாஸ் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் 1 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் ஐ.நா. சபை நடத்தும் பல பள்ளிக்கூடங்கள் இடிந்து சேதமடைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் காஸாவை சீரமைக்க சர்வதேச நாடுகள் நிதி உதவிகள் மற்றும் நன்கொடைகள் அளித்து வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் சிறுமி மலாலா காஸாவுக்கு ரூ . 30 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்காக போராடியதற்காக அவரை தலிபான் தீ விரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் லண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற உயிர் பிழைத்தார். சேவையை பாராட்டி சமீபத்தில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்