முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தேவர் சிலைக்கு அமைச்சர் தலைமையில் மாலை

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

மதுரை, அக் 31 - மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமையில் அதிமுகவினர் நேற்று மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 107வது ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ தலைமையில் அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, ஆர். கோபாலகிருஷ்ணன் எம்.பி, எம்எல்ஏக்கள் ஏ.கே. போஸ், சுந்தர்ராஜன், துணை மேயர் கு. திரவியம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மண்டல தலைவர் பெ. சாலைமுத்து, மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைபாண்டியன், சி. தங்கம், வில்லாபுரம் ஜெ. ராஜா, ஜி.என். அன்புசெழியன், பகுதி கழக செயலாளர்கள் எம்.என். முருகன், வி.கே.எஸ். மாரிச்சாமி, பூமிபாலகன், ஏ.கே. முத்து இருளாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் முனியசாமி, சண்முகவள்ளி, எல்லீஸ் நகர் ஏ. இந்திரா, அணி செயலாளர்கள் எஸ்.டி. ஜெயபாலன், பெ. இந்திராணி, ஏ. ராஜீவ்காந்தி, கே. ரமணி, டி. வினோத்குமார், வழக்கறிஞர்கள் ஏ.பி.பாலசுப்பிரமணியன், ரமேஷ், அசோகன், கவுன்சிலர்கள் கண்ணகி, இரா. லெட்சுமி, புதூர் அபுதாஹீர், கேசவ பாண்டியம்மாள், குமுதா, கலாவதி, முத்துமீனாள், விஜி என்ற விஜயராகவன், பி. குமார், ராஜலட்சுமி மகாதேவன், வட்ட செயலாளர்கள் ஏ. காஜா, எஸ். போஸ், புதூர் கே.எம். கண்ணன், கார்த்திக் முனியசாமி மற்றும் எம்.ஜி. பாண்டியன், புதூர் பாப்பா, பாத்திமா, அல. பாண்டி, மார்க்கெட் முத்துராமலிங்கம், அண்ணாநகர் முத்துச்சாமி, வெற்றிவேல், ஆட்டோ விஜயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் பொறுப்பு குழு தலைவர் கோ. தளபதி தலைமையில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், நிர்வாகிகள் வேலுச்சாமி, குழந்தைவேலு, ஜெயராம், ஒச்சுபாலு உள்ளி்ட்ட திமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் பூமிநாதன், அவை தலைவர் சின்னசெல்லம், மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் சரவணன், இளைஞரணி துணை செயலாளர் பி.ஜி. பாண்டியன், மாநில தொழிற்சங்க செயலாளர் மகபூப்ஜான், பாஸ்கரசேதுபதி, சுப்பையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்பி ராம்பாபு, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே. ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சேதுராமன், மாநில துணை தலைவர் பி. காந்தி, அன்னபூரணா தங்கராஜூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய பார்வர்டு பிளாக் சார்பில் அதன் நிறுவன தலைவர் பி.டி. அரசகுமார் தலைமையில் தேவர் சிலைக்கு மாலையணிவித்து அக்கட்சியினர் மரியாதை செலுத்தினர். முன்னதாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். ஜனநாயக பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிறுவன தலைவர் வேலுசாமி தலைமையில் தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் அதன் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் இசக்கிமுத்து, குருசாமி, வழக்கறிஞர் பகவதி, இளைஞரணி வேலுசாமி, செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்