முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச ஜமாத் கட்சியின் தலைவருக்கு மரண தண்டனை

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

டாக்கா, அக்.31 - வங்கதேசத்தின் ஜமாத் –இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மோதிர் ரகுமான் நிஜாமிக்கு அந்த நாட்டு சிறப்பு தீர்ப்பாயம் நேற்று மரண தண்டனை விதித்தது.

1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப்போரின்போது ஜமாத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். அப்போது அவர்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளை சிறப்பு தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. ஜமாத் தலைவர் நிஜாமி(71) விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர் பான வழக்கை விசாரித்த சிறப்பு தீர்ப்பாயம் அவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வங்கதேச போர் குற்றத்தில் தண்டனை பெற்றுள்ள 6-வது ஜமாத் தலைவர் நிஜாமி. இது குற்றம் தொடர்பாக மேலும் இரு ஜமாத் தலைவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.நிஜாமியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள் ளதால் வங்கதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்