முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை செப்பனிடும் பணி குறித்து மேயர் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ 1 - சென்னை மாநகராட்சி மேயர் . சைதை துரைசாமி சென்னை மாநகராட்சிஆணையாளர், சென்னை மாநகராட்சி விக்ரம் கபூர், அவர்களின் தலைமையில், சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை களைய, குறிப்பாக பருவமழையினால் சாலையில் தேங்கும் மழைநீரை அகற்றவும், சாலையில் விழும் மரங்களை அகற்றவும், சாலையில் ஏற்படும் சேதத்தையும் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும், சென்னை மாநகராட்சியில் உள்ள இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு நிவாரணம், புனரமைப்பு மற்றும் மீட்பு பணிகளை உடனுக்குடன் மண்டல அளவில் மேற்கொள்வதை கண்காணிக்க சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் பருவமழைக்கால உடனடி நடவடிக்கை எடுப்பதற்கென்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் வடகிழக்குப் பருவமழையால், வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட 922 சாலைகளில், 32652 ச.மீ. பரப்பளவில் உள்ள 3839 பள்ளங்கள் கண்டறியப்பட்டு, 30395 ச.மீ. பரப்பளவில் உள்ள 3654 பள்ளங்கள் தற்காலிமாக வெப்பக்கலவை மழைக்காலங்களில் பிரத்யேகமாக உபயோகிக்கப்படும் தார்கலவை ,கருங்கல் ஜல்லி மற்றும் மலைமண் கலந்த ஈரக்கலவை மற்றும் சிமெண்ட் கான்கிரீட் கலவை ஆகியவை கொண்டு செப்பனிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 2256 ச.மீ. பரப்பளவில் உள்ள 185 பள்ளங்களை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழையினால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க தொடர் நடவடிக்கையாக பல்வேறு பணிகள் பொதுசுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி மேயர் . சைதை துரைசாமி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தியாகராயநகர், டாக்டர் நாயர் சாலையில், காலை திடீரென ஏற்பட்ட 15 அடி (நீளம்/அகலம்/உயரம்) அளவுள்ள பள்ளத்தினை பணியாளர்கள் மூடி செப்பனிடுவதை ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி மேயர்சைதை துரைசாமி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் இதுபோன்று திடீரென பள்ளங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை புவியியல் வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, 117-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சின்னையா (எ) பி. ஆறுமுகம் , சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர். அனைத்து மண்டலங்களிலும் குடிசைப் பகுதிகளில் 34 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில் 3676 பேர்கள் பயனடைந்துள்ளனர். மொத்தம் இதுவரையில் 219 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 20,858 பேர்கள் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம்களில் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் உள்ளவர்கள் அனைவருக்கும் மலேரியா நோய்களுக்கான ரத்த தடவல் எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் காய்ச்சல் பற்றிய விவரங்கள் பெறப்பட்டு நோய்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினந்தோறும் 1000 இடங்களுக்கு மேல் குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டு, குடிநீரின் தரம் உறுதி செய்யப்படுகின்றது.

மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு கழிவு நீர் தேங்கியுள்ள இடங்கள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு போன்ற இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் போன்ற கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார ஆய்வாளர்களை கொண்டு மாநகராட்சியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு நலக்கல்வி அளிக்கப்பட்டு, பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, தேவையற்ற பொருள்களை அகற்றி ஏடிஸ் கொசுப்புழுக்கள் வளராமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் மருத்துவமனை வளாகங்களில் கொசுப்புகை மருந்து அடிக்கப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி சென்னையில் வழங்கப்படும் நீரின் தரத்தை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது குடிநீர் குழாய்கள், லாரிகள் மற்றும் குடிநீர் வாரிய தண்ணீர் தொட்டிகளில் உள்ள குடிநீரின் தரம் சுகாதார ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. குடிநீரில் நோய்க்கிருமி இல்லாததை உறுதி செய்யும் இருப்பு குளோரின் அளவு (சுநளனைரயட உhடடிசiநே) ஆய்வு செய்யப்படுகிறது. இருப்பு குளோரின் இல்லாத இடங்களில் வீடுதோறும் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்த விவரங்கள் குடிநீர் வாரியத்திடம் அளிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைக்கு ஆவண செய்யப்படுகிறது.

தொற்றுநோய் தடுப்பு நடடிவக்கைக்காக பீளீச்சிங்பவுடர், குளோரின் மாத்திரைகள் போதுமான அளவு உள்ளது.

கொசுக்கள் கட்டுப்பாடு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களை தடுப்பதற்காhக 3520 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களைக் கொண்டு கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடங்களை குறைக்கும் (ளுடிரசஉந சுநனரஉவiடிn) பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மண்டலங்களிலும் 654 கைத்தெளிப்பான்கள் கொண்டு தேங்கியுள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்ப்படுகைகளில் கொசுப்புழு மருந்து தெளிக்கப்பட்டு, கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

வளர்ந்த கொசுக்களை கட்டுப்படுத்த வீடுவீடாகவும், மழைநீர் வடிகால்களிலும் மற்றும் குடிசைப்பகுதிகளிலும் 435 கைகளால் எடுத்து செல்லும் புகைப்பரப்பிகளாலும், 42 வாகனத்தில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பிகளாலும் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொதுமக்களுக்கு பொதுசுகாதார பணியாளர்களை கொண்டு காய்ச்சி வடிகட்டிய குடிநீரினை குடிக்கவும், சுகாதாரமான உணவு உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மழைக்காலங்களில் பரவும் நோய்களை தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய நோய் தடுப்பு முறைகள் குறித்த கைப்பிரதிகள் அச்சிடப்பட்டு, அனைத்து கோட்ட சுகாதார ஆய்வாளர்களை கொண்டு வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கென வரும் பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் வகையில் போதுமான பரிசோதனை கருவிகள் மற்றும் மருந்துகளும் உள்ளன.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் காய்ச்சல் பற்றிய விவரங்கள் பெறப்பட்டு நோய்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

காய்ச்சல் உள்ள பொதுமக்கள் தங்களின் அருகாமையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையினை அணுகி தேவையான சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்