முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து நாடுகளின் உதவியை கோரும் அமெரிக்க தளபதி

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், நவ.01 - ஈராக் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் வான்வழி தாக்குதலில், அனைத்து நாடுகளின் உதவியும் ஆலோசனைகளும் தேவைப்படுகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் மார்ட்டீன் டிம்ப்சே வாஷிங்டனில் கூறினார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் வான்வழி தாக்குதல் குறித்து வாஷிங்டனில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி மார்ட்டீன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈராக்கில் அன்பர் பிராந்தியத்தில் மட்டும் ஏராளமான தீவிரவாத பயிற்சி முகாம்களை அமைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும், அவர்கள் வேறு பகுதிகளுக்கு ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவர்களை எதிர்த்து தரை வழியாக தாக்குதல் நட்த ஈராக் மற்றும் குர்தீஷ் பிராந்திய ராணுவம் முன்வந்துள்ளது. அவர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ராணுவ பயிற்சிகளை அளித்து வருகின்றனர். எனினும், அவர்களின் ராணுவ பயிற்சிக்கு மேலும் பல நாடுகள் உதவ முன்வரவேண்டும். அத்துடன், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்து அனைத்து நாடுகளின் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பிராந்தியங்களில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதரவுடன் கடந்த மார்ச் மாதம் முதல் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அன்பர் பிராந்தியத்தில் உள்ள கிராமத்தை கடந்த வாரம் ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி, அங்கிருந்த அல்பு நிமர்பிரிவை சேர்ந்த சுமார் 220 முஸ்லிம்களை கொன்று குவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்