முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணியை ஏன் நீக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - முகுல் முத்கல் குழு அறிக்கையின் அடிப்படையில், ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏன் நீக்கக்கூடாது என சூதாட்ட விசாரணை அறிக்கை தொடர்பான விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டுகேள்வி எழுப்பியுள்ளது.
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான விசாரணை இறுதி அறிக்கையை அண்மையில் முகுல் முத்கல் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை அணியின் நிரவாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பன் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், முத்கல் குழு அறிக்கை மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தாக்கூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முத்கல் குழு விசாரணை அறிக்கையை சுட்டிக் காட்டிய உச்ச நீதிமன்றம், "சூதாட்டத்தில் சென்னை அணியின் நிரவாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பன் ஈடுபட்டது தெளிவாகியுள்ளதால் மேற்படி விசாரணை ஏதுமின்றி ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து சென்னை அணியை ஏன் நீக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், சென்னை அணியின் உரிமையாளரான, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் அதன் நிர்வாகியான ஸ்ரீனிவாசனின் தனது பங்குகள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றம் எழுப்பிய விவகாரங்கள்:

ஏகப்பட்ட ஒழுங்கீனங்கள் இருக்கும் போது பிசிசிஐ ஏன் விதிகளின் படி செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தகுதி இழப்பு செய்யக்கூடாது?

சீனிவாசனுக்கு தனது அலுவலகம் முக்கியமா அல்லது அவரது அணி முக்கியமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவருமாக கேப்டன் தோனி இரட்டை பந்தம் கொண்டுள்ளது ஏன்? இது கவலையளிக்க கூடியது.

பிசிசிஐ-யின் ஆயுள் முடிந்து விட்டது. ஒரு முறையான, நியாயமான வாரியமே இருக்க வேண்டும். தற்செயலான சூழ்நிலைகளால் நிர்பந்திக்கப்பட்ட கிரிக்கெட் வாரியம் இருக்கக்கூடாது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள் யார்? போர்டை அமைத்தவர்கள் யார் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற ஒன்றில் ரூ.400 கோடி முதலீடு செய்யும் முடிவை எடுத்தது யார்? சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் பங்குதாரார் உரிமை பற்றிய விவரங்கள், குறிப்பாக சீனிவாசன் அவரது குடும்பத்தினருக்கு இதில் உள்ள பங்கு ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட விசாரணை தொடங்கியதிலிருந்து இன்றுதான் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி என்பதை பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது.

அடுத்த விசாரணை டிசம்பர் 1-ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து