முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

70 கோடி பேருக்கு ஆதார் எண்கள் விநியோகம்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - கடந்த 15-ம் தேதி வரை 70.43 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட் டுள்ளன என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மாநிலங்களவையில் திட்டத் துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:
ஒன்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கும், 8 மாநிலங் கள்/யூனியன் பிரதேசங்களில் 75 முதல் 90 சதவீதம் பேருக்கும், மற்ற பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கும் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 15-ம் தேதி வரை 70.43 கோடி பேருக்கு ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. ஆதார் திட்டத்துக்காக 2009-10ம் ஆண்டு முதல் 2016-2017-ம் ஆண்டு வரைக்கும் ரூ. 13,663.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி வரை 5,181 கோடி செலவிட்டுள்ளது.
புதிதாக செல்போன் இணைப்பு கோரி விண்ணப்பிப்பவர்களிடம் ஆதார் எண்ணைக் கேட்டுப் பெற்று, அத்தகவலைப் பாதுகாக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து