முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் எரிவாயு மானியத்தை கூட்டுறவு - தபால் அலுவலகங்களில் செலுத்த நடவடிக்கை கோரி கடிதம்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே தெரிவித்தபடி, சமையல் எரிவாயு மானியத்தை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி கிராமப்புற மக்களும் பயனடையும் வகையில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனமுதலமைச்சர் . ஓ.பன்னீர்செல்வம் .பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து முதலமைச்சர் . ஓ. பன்னீர் செல்வம், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:, ச மையல் எரிவாயு மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தும் திருத்தப்பட்ட முறை, நாட்டில் உள்ள 54 மாவட்டங்களில் கடந்த 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து தொடங்கப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
புரட்சித் தலைவி அம்மா, அப்போதைய பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும், கடந்த ஜுன் மாதம் 3-ம் தேதி பிரதமரிடம் அளித்த மனுவிலும் மிகவும் முன்னேறிய, நன்கு நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், இந்த நடைமுறை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார் - இதன்படி, கல்வி உதவித் தொகை, மகப்பேறு நலன்கள், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் போன்றவை வங்கிகள் மூலமாகவே செலுத்தப்படுகின்றன - அதேசமயம், மண்ணெண்ணெய் உட்பட பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உரங்கள் போன்றவற்றிற்கு, மானியங்கள் பணமாக வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் கடுமையாக எதிர்க்கிறது - ஏனெனில், இதுபோன்ற பொருட்கள் விஷயத்தில் மானியத்தின் அளவைக் காட்டிலும், பொருட்கள் உரிய நேரத்தில் போதிய அளவு கிடைப்பதே முக்கியம் என தமிழக அரசு கருதுகிறது மிகச்சிறந்த நிர்வாக நடைமுறை அடிப்படையில்,புரட்சித் தலைவி அம்மா, ஏற்கெனவே வலியுறுத்தியபடி, நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மாநில அரசுகள்தான் பணத்தை செலுத்த வேண்டும், இதற்காக மத்திய அரசு தனது பங்கை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்

சமையல் எரிவாயு மானியத்தை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லையென தமிழகத்தின் யோசனையை ஏற்று, உரிய திருத்தம் செய்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிnறன் உண்மையில் சொல்ல வேண்டுமானால், சமையல் எரிவாயு சிலிண்டர் பயனாளிகளுக்கும் மாநில அரசுகள் மூலம்தான் மானியத் தொகையை வழங்க வேண்டும் என்பதே தங்களது கருத்து என்றும், ஆனால், மானியத் தொகை முழுவதையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாலும், சமையல் எரிவாயு விநியோகம், மத்திய அரசின் கீழ் உள்ள பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுவதாலும் இந்தப் பிரச்னை மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்டது .
ஆயினும், நுகர்வோர் எந்தவொரு சிரமத்திற்கும் ஆளாகாமல் பார்த்துக்கொள்ளும் வகையில், அவர்கள் எதிர்நோக்கும் சில குறைபாடுகளை தீர்க்கும் வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் - முதலாவதாக, மாநிலம் முழுவதும் போதுமான வங்கி கட்டமைப்பு வசதி, இத்திட்டத்திற்கு கிடைக்கச் செய்யவேண்டும் - கிராமப்புறங்களிலும், குக்கிராமங்களிலும் வசிக்கும் மக்கள், தேசிய வங்கிக் கிளைகளை அணுகுவது சிரமம் என்பதால், அவர்களுக்கு எளிதாக மானியம் கிடைத்திட தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களை பயன்படுத்தலாம் - நகர்ப்புறங்களில் மானியம் வழங்குவதற்கு நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம் - உண்மையில், முதியோர் ஓய்வூதியத் தொகையினை வீடுகளுக்குச் சென்று வழங்கும் வசதி வங்கிகளுக்கு இல்லாததால், வங்கி கணக்குகள் மூலம் முதியோர் ஓய்வூதியத் தொகையினை வழங்குவதில் ஏற்படும் பிரச்னையை ஏற்கெனவே தமிழக அரசு சந்தித்து வருகிறது - எனவே, அஞ்சல் பணவிடை மூலம் இந்த முதியோர் ஓய்வூதியம் அனுப்பப்பட்டு வருகிறது - ஆகவே, மாநிலம் முழுவதும் போதுமான அளவிற்கு வங்கி வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்
மேலும், சர்வதேச விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயு சந்தை விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வால், நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டியது அவசியம் - எனவே, ஒட்டுமொத்தமாக மானியத் தொகையை நிர்ணயிக்காமல், சமையல் எரிவாயு சந்தை விலை உயரும் போது, அதற்கேற்ப மானியத்தொகையையும் உயர்த்தி வழங்கவேண்டும் - இவ்வாறு உயர்த்தி வழங்கப்படும் தொகை, வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுவதன் மூலம் நுகர்வோர் சிரமத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் - இதுபற்றிய தெளிவின்மை காரணமாக நுகர்வோர் இடையே, குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் இடையே அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது.. சமையல் எரிவாயு நுகர்வோருக்கான திருத்தி அமைக்கப்பட்ட நேரடி பணப்பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தும்போது, தமிழக அரசின் இந்த ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகிnறன் .
இவ்வாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் . ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து