முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை தீபத்திருவிழா: சந்திரசேகரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருவண்ணாமலை - திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 3ம் நாளான நேற்று காலை கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.இந்நிகழ்ச்சியில் பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 26ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் நாளான நேற்று முன்தினம் காலை தங்க சூரிய பிரபை வாகனம், இரவு விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணா மலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானங் களில் மாட வீதிகளில் பவனி வந்தனர்.
3ம் நாளான நேற்று காலை கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட விநாயகர், சந்திர சேகரர் கோயில் வளாகத்தில் இருந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபம் வந்தடைந் தனர்.
அங்கிருந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தீபாராதனை காட்டி வழி பட்டனர். காலை 11 மணியளவில் அண்ணாமலையார் கோயிலில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் பரதநாட்டியம், சமய சொற்பொழிவு திருமுறை இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.இரவு உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் சுப்பிரமணியர், சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், வெள்ளி அன்ன வாகனத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் மாட வீதிகளில் பவனி வந்தனர்.
இன்று 4ம் நாள் நிகழச்சி நடைபெறவுள்ளதால் பக்தர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து