முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி மோசடி வழக்கு: ராஜபக்சே தம்பி சிறையில் அடைப்பு

வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2015      இலங்கை
Image Unavailable

கொழும்பு - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே மந்திரி சபையில் பொருளாதார அபிவிருத்தி மந்திரியாக பதவி வகித்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு பசில் ராஜபக்சே மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து சிறீசேனா அரசு பசில் ராஜபக்சே மீது ரூ. 3.20 கோடி நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பசில் ராஜபக்சே, தனது மனைவி புஷ்பாவுடன் அமெரிக்காவுக்கு தப்பி சென்றார். அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை இலங்கை அரசு நாடியது. மேலும் அவரை நிதி குற்றத்தடுப்பு போலீஸ் முன் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனால் வேறு வழியின்றி பசில் ராஜபக்சே கொழும்பில் நிதி குற்றத்தடுப்பு போலீஸ் முன் ஆஜரானார்.

7 மணி நேர விசாரணைக்கு பிறகு மாலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் 2 முன்னாள் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் இரவு 7 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 5ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து பசில் ராஜபக்சேவும், 2 அதிகாரிகளும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் பசில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து