முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவம் கைப்பற்றிய நிலங்கள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும்: அதிபர் சிறீசேனா உறுதி

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      இலங்கை
Image Unavailable

 கொழும்பு - இலங்கையில் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பொறுப்பேற்று நேற்று முன்தினத்துடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. அதை தொடர்ந்து அரசு டி.வி.யில் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த 30 ஆண்டுகால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துவிட்டது.

இனி அது மீண்டும் நடைபெறாது. அனைத்து சமுதாயத்தினருடனும் நல்லெண்ணம் மற்றும் நட்புறவுடன் இருக்க நாங்கள் உறுதி மேற்கொண்டுள்ளோம்.அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதிகளில் ராணுவம் வாபஸ் பெறப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் மிகுந்த சாம்பூர் மற்றும் தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட மைனாரிட்டி மக்களுக்கு சிங்களர்களை விட அதிக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரப்பப்படுகின்றன.போரின் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மட்டும் பொது மக்களிடம் இருந்து ராணுவம் நிலங்களை கைப்பற்றவில்லை.

கொழும்பிலும் பறிமுதல் செய்தது. அவற்றை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதில் என்ன தவறு உள்ளது.இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து