முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுதானியம் பயறு சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை

புதன்கிழமை, 30 நவம்பர் 2016      வேளாண் பூமி
Image Unavailable

இளையான்குடி வட்டத்தில் சிறுதானியம் மற்றும் பயறுவகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . அதுகுறித்து இளையான்குடி வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

இளையான்குடி வட்டாரத்தில் பெரும்பாலும் அனைத்து பயிர்களும் மானாவாரியாகவே சாகுபடி செய்யப்படுகிறது. பாசனம் பெறும் பரப்பு குறைவாகவே உள்ளது. மேலும் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக உள்ளதால் மழைநீரை நம்பியே நெல் பயிர் சாகுபடி செய்யப்படுவதல் காய்ந்து விடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சாகுபடி மூலம் உறுதியான வருமானம் கிடைக்க சிறுதானிய பயிர்கள் மற்றும் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது.

இந்த வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகளில் களிமண் மற்றும் களிமண் கலந்த வண்டல் மண் காணப்படுகிறது. இந்த மண் சிறுதானியம் மற்றும் பயறுவகை பயிர்களுக்கு மிகவும் ஏற்றதாகும். குறிப்பாக சிறுதானிய பயிர்களான கேப்பை வரகு சாமை போன்றவற்றுக்கும் பயறுவகைகளில் உளுந்து பாசிபயறு தட்டை பயறு ஆகிய பயிர்களுக்கும் உகந்தது.

1. தற்போது உள்ள பருவ சூழ்நிலையில் மானாவாரி நெல் சாகுபடிக்கு போதிய மழை கிடைப்பது அரிதாக உள்ளது.

2. சிறுதானியம் பயறுவகை பயிர்களுக்கு பாசனநீர் தேவை குறைவு

3.மண் மற்றும் பாசனநீரில் ஒரளவு உப்புத்தன்மையை தாங்கி வளர்கின்றன.

4.சாகுபடி செலவு குறைவு

5.பூச்சி நோய் தாக்குதல் குறைவு

6. சந்தையில் அதிக விலை உள்ளதால் சிறுதானியங்களுக்கு சராசரியாக கிலோவிற்கு ரூபாய் 40-50 வரையிலும் பயறுவகைகளுக்கு கிலோவிற்கு ரூபாய் 100-110 வரையிலும் விற்பனைவிலை கிடைக்கிறது.

     மேற்கூறிய காரணத்தால் இளையான்புடி வட்டாரத்தில் சிறுதானியம்; மற்றும் பயறுவகை; சாகுபடி லாபகரமாக இருக்கும் என சிபாரிசு செய்யப்படுகிறது.

ரகங்கள்: கேப்பை பயிரில் தற்போது கோ 14 என்ற ரகம் சாகுபடிக்கு சிபாரிசு செய்யப்படுகிறது. இந்த ரகம் கார்த்திகைஇ தை மற்றும் சித்திரை பட்டங்களிலும் சாகுபடிக்கு ஏற்றது.105 நாட்களில் ஏக்கருக்கு 2 மெட்ரிக் டன் வரை விளைச்சல் தரவல்லது இளையான்குடி வட்டத்தில் தற்போது பெரும்பச்சேரி கிராமத்தில் விதைப்பண்னை அமைக்கப்பட்டு சான்று விதை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதே போல உளுந்து பயிரில் வம்பன்5 வம்பன6 பாசிபயிறு கோ6இ தடடைப்பயறு பி 152இ கோ7 ரகங்களும் குறுகிய காலத்தில் நல்ல விளைச்சல் தரக்கூடியவை. இந்த ஆண்டு சர்வதேச பயறுவகை ஆண்டாக அனுசரிக்கப்ப்டுவதால் பயறுவகை சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரப்புபயிர்இ ஊடுபயிராகவும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே  இளையான்குடி வட்டத்தில் விவசாயிகள் சிறுதானியம் மற்றும் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து மழை குறைவான காலங்களிலும் நல்ல விளைச்சலும் வருமானமும் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்