முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் இன்று மஹா தீபம் ஏற்றப்படுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, தங்கமேருவில் பிச்சாண்டவர் எழுந்தருளினார். இதையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இன்று மலை உச்சியில் மஹாதீபம் மாலையில் ஏற்றப்படுகிறது .இதேபோல் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களிலும் கார்த்திகை தீபம்  ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 8-ம் நாளன்று தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து, திருக்கோயிலின் நான்கு மாடவீதியை சுற்றிவரும் வழியில் உள்ள காந்திசிலை அருகே சுமார் 1 மணி நேரம் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் நள்ளிரவு குதிரை வாகனத்தில் நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இன்று  அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலின் கருவறை முன்பு பரணி தீபமும்,  இன்று  மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்