முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தனூர் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை  -  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் தனூர் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் இன்று முதல் வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி வரை  நடைபெறுகிறது.மேற்படி நாட்களில் அதிகாலையில்   சேவார்த்திகளுக்கு திருஞான சம்பந்தர்  சன்னதி முன்பாக வழக்கம் போல ஞானப்பால் அளிக்கப்படுகிறது.  மதுரை அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் சொக்க நாதபெருமானே பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புனித தலம் மதுரையாகும். மூர்த்தி,தலம், தீர்த்தம் ஆகிய  மூன்றிலும் சிறப்புடையது மா மதுரை. கேட்க முக்தி தரும் தலம், உமையம்மை தடாதகைப் பிராட்டியாகவும் ,சிவபெருமா சுந்தர பாண்டியனாகவும் முருகப்பெருமான் உக்கரப்பெரு வழிதியாகவும் திருவுருவம் கொண்டு ஆட்சி செய்த திரு நகர் மதுரையம்பதி ஆகும். புதன்  ஸ்தலமாக மதுரை மாநகரம் விளங்குவதால் இங்கு பிரார்த்தனை செய்பவர்கள்  கல்வியில் மேம்பாடு அடைகிறார்கள்

இத்திருக்கோவிலில் தனூர் (மார்கழி) மாதம் நடைபெறும் திருவிழாக்கள் விவரம்:இத்தி திருக்கோவில்  கி.பி. 1426 ம் பசலி தனூர் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் 16-12-2016 தேதி முதல் 13-1-2017 முடிய சிறப்பாக நடைபெறவுள்ளது. மேற்படி நாட்களில் அதிகாலையில் சேவார்த்திகளுக்கு திரு ஞான சம்பந்தர் சன்னதி முன்பாக வழக்கம் போல், திருஞானப்பால் வழங்கப்படவுள்ளது.
மேற் குறிப்பிட்ட நாட்களில், இத்திருக்கோவிலின் வெளிப்புற கதவுகள் , அதிகாலையில் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு , உச்சிக்கால பூஜை முடிந்து பகல்  12 மணிக்கு  நடை சாத்தப்படும். பின்னர் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8மணிக்கு பல்லக்கு புறப்பாடாகி பூஜை ஆரம்பமாகி இரவு 8.30 மணிக்குள் பூஜைகள் முடிந்தவுடன் திருக்கோவில் நடை சாத்தப்படும் என்ற விபரத்தினை திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்