முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி,

 

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்;கில் நடைபெற்றது.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20.12.2016 அன்று பேச்சிப்பாறை அணையின் நீர்மட்ட இருப்பு 10.10 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்ட இருப்பு 33.30 அடியும், சிற்றார்-1 அணையின் நீர்;மட்ட இருப்பு 7.21 அடியும், சிற்றார்-2 அணையின் நீர்;மட்ட இருப்பு 7.31 அடியும், பொய்கை அணையின் நீர்மட்ட இருப்பு 9.30 அடியும், மாம்பழத்துறையாறு நீர் மட்ட இருப்பு 38.55 அடியும் உள்ளது.

20.12.2016 அன்று வரை வேளாண் விரிவாக்க மையம் மூலம் 245.545 (மெ.டன்) பரப்பில் நெல் பயிறு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 01.04.2016 முதல் 20.12.2016 முடிய 17,280 நெட்டை ரக தென்னங்கன்றுகளும், 16,664 நெட்டை குட்டை ரக தென்னங்கன்றுகளும், 1,042 குட்டை நெட்டை ரக தென்னங்கன்றுகளும் ஆக மொத்தம் 34,986 தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தடையின்றி உரம் விநியோகிப்பதற்காக டான்பெட் நிறுவனத்தில் 581 மெட்ரிக் டன்னும், கூட்டுறவு சங்கங்களில் 3,019 மெட்ரிக் டன்னும், தனியார் விற்பனையாளர்களிடம் 962 மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் 4,564 மெட்ரிக் டன் உரம் இருப்பில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது பதில்கள் வாசிக்கப்பட்டது.தேங்காப்பட்டணம் பாலத்தடி பகுதியை சுற்றியுள்ள இடங்களில் ஆக்கிரமிப்பில் ஏற்டபடவுள்ள இயற்கை பேரிடரை தடுக்க, வட்டாட்சியர் விளவங்கோடு அவர்களுக்கு 12.12.2016 அன்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. எல்கை நிர்ணயம் செய்து வரைபடம் மற்றும் படிவம் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்டவுடன் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும் விளவங்கோடு வட்டம், தேவிகோடு அருகில் உள்ள பெருங்குளம் தூர்வார மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்பட்டுள்ள குளங்கள் தூர்வாரும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், துணை இயக்குநர் சந்திரசேனன் நாயர், பொதுப்பணித்துறை (நீர் ஆதரவு) செயற்பொறியாளர் பொறி சுப்பிரமணியன், வட்டாட்சியர்கள், செயல் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்