முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலங்குளத்தில் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      திருநெல்வேலி

திருநெல்வேலி,

 திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்ற தொடக்க விழா  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் .வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மு.கருணாகரன்,இ.ஆ,ப., முன்னிலையில்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தினை தொடங்கி வைத்தார்.இவ்விழாவில்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர்  பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் ரூ.68 லட்சம் செலவில் ஒரு நீதிபதி உட்பட 16 பணியாளர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில பாளையங்கோட்டையில், 25 நீதிமன்றங்களும் தென்காசி, 5 நீதிமன்றங்களும் அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் தலா 4 நீதிமன்றங்களும் உட்பட மொத்தம் 47 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 47 நீதிமன்றங்களில் 44 நீதி மன்றங்கள் சொந்த அல்லது அரசு கட்டிடங்களில் இயங்கி வருகிறது. நீதித்துறை சுதந்திரமாகவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும்  புரட்சித்தலைவி அம்மா  நீதி நிர்வாகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.

புரட்சித் தலைவி அம்மா  கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 223 புதிய நீதிமன்றங்களை உருவாக்கிட உத்தரவிட்டதுடன் இதற்க்கு ரூ.58.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 9 நீதிமன்றங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 2016 – 17ம் ஆண்டில் உளுந்தூர் பேட்டை, காங்கேயம் மற்றும் ஆலந்தூரில் தலா ஒரு சார்பு நீதிமன்றம் ரூ.2.94 கோடியில் அமைப்பதற்க்கும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ரூ.8.69 கோடியில் கூடுதலாக மூன்று தளங்கள் அமைக்கவும், சாத்தான்குளத்தில் ரூ.5.55 கோடியில் நீதிமன்ற கட்டடம் மற்றும் குடியிருப்புகள் அமைப்பதற்கும், திருவள்ளுரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.23.50 கோடியில் கட்டுவதற்கும், திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ரூ.33.75 கோடியில் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு தேவையான ஊஊவுஏ கேமாரக்கள் கம்பியூட்டர்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க ரூ.45.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அம்மா அவர்களால் புதிய பல சிறப்பு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 25 குடும்பநல நீதிமன்றங்கள் ஒப்பளிக்கப்பட்டு 20 நீதிமன்றங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது திருநெல்வேலியிலும் ஒரு நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 8 நீதிமன்றங்களில் 4 நீதிமன்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 32 நீதிமன்றங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. இதில் 22 நீதிமன்றங்கள்  புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்டது. பெண்கற்பழிப்பு, கொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு 08.01.2013 அன்று மகளிர் நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டது.

அதற்கு முன்பாகவே  அம்மா  1.1.2013 அன்று தமிழகத்தில் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டார்கள். தேங்கி கிடக்கும் சிறு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய 31 மாலை நேர நீதிமன்றங்கள் பெரம்பலுர் மாவட்டம் தவிர 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இது போல மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் 32 தமிழகத்தில் உள்ளது.

மத்திய அரசு நிதியுதவி அளிக்க இயலாது என தெரிவித்த 49 விரைவு நீதிமன்றங்களையும் மாவட்ட நீதிமன்ற தகுதிக்கு தரம் உயர்த்தி நிரந்தர நீதிமன்றங்களாக  அம்மா  உத்தரவிட்டார்கள். நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதி குடியிருப்புகள் அமைப்பது போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.511.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.93 கோடி மட்டுமே மத்திய அரசின் பங்காகும். 2014 ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நாளில் 15,08,767 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.915.07 கோடி தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் 32 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ரூ.7.70 கோடி செலவில்  அம்மா அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. வழக்குறைஞர்களின் நலன் கருதி சேமநல நிதியை உயர்த்தி வழங்கியது. 5 ஆண்டுகளில் 213 அரசு உதவி வழக்கு நடத்துனர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது உள்ளிட்ட பல திட்டங்களை  அம்மா  செயல்படுத்தியுள்ளார்கள். ஆலங்குளத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு செய்து முன்மொழிவு அனுப்பப்பட்டதும் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றம் துவக்கப்பட்டுள்ளதால் ஆலங்குளம் பகுதி பொது மக்களின் நிலுவையிலுள்ள வழக்குகள் விரைந்து நிவாரணம் பெற இயலும் - எனப் பேசினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  பேசியதாவது:-

அம்மா  துறை தோறும் புதுமைகளையும் வித்தியாசமான திட்டங்களையும் தினந்தோறும் செய்வதையே தனது லட்சிய நோக்கமாக கொண்டவர். தமிழகத்தில் சட்டத்துறையில் நல்ல பல திட்டங்களை சீரிய முறையில் செய்து வந்தவர்கள் அம்மா அவர்களின் ஆட்சியில் தான் சென்னை உயர்நீதி மன்றத்தினுடைய நீதிபதி சட்டமன்றத்தில் நடைபெற்ற பெருமை வாய்ந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெறச் செய்த பெருமை  அம்மா அவர்களையே சாரும். ஆலங்குளம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு நிலுவைகளில் உள்ள பொது மக்கள் விரைவில் நிவாரணம் பெறுவார்கள் எனப் பேசினார். 

இந்நிகழ்ச்சியில அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் முருகையாபண்டியன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன்,இ.கா.ப., தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் ராஜமாணிக்கம், ஆலங்குளம் நீதிமன்ற நடுவர் பிச்சைராஜன்,  ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சுதாபரமசிவன்,பரணிசங்கரலிங்கம்,இ.நடராஜன்,சண்முக சுந்தரம்,    திருநெல்வேலி மாவட்ட அரசு வழக்கறிஞர் சிவலிங்கமுத்து, ஆவின் சேர்மன் ரமேஷ், கண்ணன், எஸ்.எஸ்.என்.சொக்கலிங்கம், சேர்மபாண்டி, பாண்டியராஜ், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்