முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.50.15 கோடி மானிய நிதியுதவியின் மூலம் 41,794 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன : செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் ஆசீயா மரியம் தகவல்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      நாமக்கல்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக உருவாக்கிட அரசு மானிய நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிட திட்டப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் சிறப்பு செய்தியாளர் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொந்தளம் ஊராட்சி, பி.மேட்டூர் பகுதியில் பாவாயி குப்புசாமி, குப்பம்மாள் அங்கமுத்து, மீனாட்சி முத்துசாமி உட்பட பல்வேறு பயனாளிகள் ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் கட்டியுள்ள தனிநபர் கழிப்பிடங்களையும், வடகரையாத்தூர் ஊராட்சியில் பாப்பாத்தி ராமசாமி, வெண்ணிலா செல்வம், காமாட்சி இராமசாமி, கிருஷ்ணவேணி பெரியசாமி உட்பட பல்வேறு பயனாளிகள் ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் கட்டியுள்ள தனிநபர் கழிப்பிடங்களையும், இருக்கூர் ஊராட்சியில் ரவி பெரியசாமி, ராஜு, சுரேஷ் உட்பட பல்வேறு பயனாளிகள் ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் கட்டியுள்ள தனிநபர் கழிப்பிடங்களையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து கலெக்டர் மு.ஆசியா மரியம் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழகத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டங்களாக உருவாக்கிடும் பொருட்டு முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசு தேர்வு செய்து தூய்மை பாரத திட்டத்தின் மூலம் இப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள உள்ள 322 ஊராட்சிகளையும் உருவாக்கிட திட்டமிடப்பட்டு மாவட்டம் முழுவதும் அதற்கான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களிடையே தனிநபர் கழிப்பிடம் திட்டம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இல்லங்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவற்றில் தனிநபர் கழிப்பிடங்கள் இல்லாத வீடுகளுக்கு ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ல் தமிழகத்தில் சிறப்பான சுகாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தினை முற்றிலும் ஒழித்து, அனைவரும் கழிப்பறையை கட்டி பயன்படுத்த தனிநபர் இல்லக் கழிப்பறை திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்ட ரூ.12000- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தினை 2016-17 ஆம் ஆண்டில், தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக உருவாக்கிடும் நோக்கத்தில் கழிப்பிடங்கள் கட்டிப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் 2015-16 ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக (2.10.2015-ல் 61 கிராம ஊராட்சிகளும், 26.01.2016-ல் 46 கிராம ஊராட்சிகளும் ஆக) 107 கிராம ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத கிராமங்களாக சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்பொழுது, 2016-17 ஆம் ஆண்டிற்கு, மீதமுள்ள 215 கிராம ஊராட்சிகளில், 15.08.2016-ல் 10 கிராம ஊராட்சிகளும், 21.11.2016-ல் 20 கிராம ஊராட்சிகளிலும் மொத்தம் 30 கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 31.03.2017க்குள் எஞ்சியுள்ள 185 கிராம ஊராட்சிகளிலும் 100மூ கழிப்பிடங்கள் கட்டி முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு, திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கிட அனைத்து பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென, கடந்த 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டுகளில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் ரூ.12,000 மானிய நிதயுதவி வீதம் 13,922 தனி நபர் இல்லக்கழிப்பிடங்களுக்கு ரூ.16.71 கோடி நிதியுதவியும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் 27,872 கழிப்பிடங்களுக்கு ரூ.33.45 கோடி நிதியுதவியும் என மொத்தம் 41,794 தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட ரூ.50.16 கோடி அரசு ஊக்கத்தொகையாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு 41,794 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago