முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் நபார்டு வங்கியின் திட்ட அறிக்கை: கலெக்டர் கே.விவேகானந்தன், வெளியிட்டார்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி:தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் 2017-2018-ஆம் ஆண்டின் நபார்டு வங்கியின் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டரும், மாவட்ட அளவிலான ஆலோசனை குழுவின் தலைவருமான கே.விவேகானந்தன், வெளியிட்டார்.இக்கூட்டத்தில் திட்ட அறிக்கையை வெளியிட்டு பின்னர் கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது :-தருமபுரி மாவட்டத்தில் 2017-2018-ம் ஆண்டிற்காக நபார்டு வங்கி, திறன் அடிப்படையில் ரூ. 3734.72 கோடியாக மதிப்பீடு செய்துள்ளது. இதில் பயிர் கடனுக்கு ரூ. 1753.35- கோடியும், வோளண் தவணை கடனுக்காக ரூ. 968.38- கோடியும், பண்ணை சாரா கடனாக ரூ. 396.35- கோடியும் மற்றும் கல்விக் கடன், வீடு வசதிக் கடன் மற்றும் ஏற்றுமதிக்காக முறையேரூ. 94.95- கோடியும், ரூ. 80.44ஃ- கோடியும் மற்றும் ரூ. 4.65- கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 2017-2018-ம் ஆண்டின் திட்ட அறிக்கையை நபார்டு வங்கி எதார்த்தமான முறையில் மதிப்பீடு செய்துள்ளதாகவும், அந்த திட்ட இலக்கை வங்கிகள் எளிதாக அடைந்து விடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்கள்.மேலும் நபார்டின் 2017-18ம் ஆண்டின் திட்ட இலக்கினை வங்கிகள் மாநில அரசின் பல்வேறு மானியம் கொண்ட திட்டத்தினோடு ஒருங்கிணைத்து பயன் அடையலாம். இத்திட்டத்தின் சம்பந்தமாக விரிவாக எடுத்துரைக்கையில் பயிர் கடன் இலக்கை அடைய, உயர்ந்த தொழில் நுட்ப வேளாண் முறைகளான சொட்டு நீர் தெளிப்பு நீர்பாசனம், திருந்திய நெல் சாகுபடி, செம்மை கரும்பு சாகுபடி, செம்மை பயறு சாகுபடி போன்ற வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையின் ஆதரவோடு மானியங்கள் அடங்கிய திட்டங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கலாம் எனவும், வேளாண் தவணைக் கடன் அளித்து, மத்திய அரசிடமிருந்து நபார்டு வங்கி மூலமாக மானியமும் பெறலாம் எனவும், இத்திட்டமானது மத்திய அரசின் குறிக்கோளான வேளாண்மையில் 4மூ வளர்ச்சி, 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இருமடங்கு ஆகுதல் மற்றும் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இக்கூட்டத்தில் நபார்டு வங்கி (உதவி) பொது மேலாளர் டி.கே. பார்த்தசாரதி, முன்னோடி வங்கி மேலாளர் எம். முத்தரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மைத்துறை) சுசிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்