முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனப்பகுதியில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்தவர் கைது

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      தர்மபுரி

தருமபுரி மாவட்டம் அரூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அதிகமாக வன விலங்குகள் வேட்டையாடுவதாக தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் ஷிஷ்குமார் வத்சவா மற்றும் அரூர் மாவட்ட வன அலுவலர் சென்பகபிரியா ஆகியோருக்கு வந்த இரகசிய தகவலின் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அரூர் மாவட்ட வன அலுவலரின் உத்திரவுப்படி வனவர் குமார் தலைமையில் வனவர்கள் மூர்த்தி, மனோகரன், வனக்காவலர்கள் குணசேகரன், கூத்தன், தேவராஜலூ, சண்முகம், மனோகரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அரூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கம்பாலை, அரசனத்தம், தொல்தூக்கி ஆகிய வனப்பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்பொழுது வள்ளிமதுரை காப்பு காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் வனப்பகுதில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். அப்பொழுது வனத்துறையினரை கண்டதும் அவர் ஓட்டம் பிடித்துள்ளார். உடனடியாக வனக்காவலர்கள் அவரை துரத்தி மடக்கிப் பிடித்தனர். மேலும் பிடிபட்டவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்டவர் அரூர் வட்டம் வள்ளிமதுரையை சேர்ந்த இராமன் (50) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் வன விலங்குகளை வேட்டையாட கள்ளத்துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பிடிப்பட்ட இராமனியிடமிருந்து அனுமதியின்றி பயன்படுத்தி வந்த கள்ளத்துப்பாக்கி மற்றும் நெற்றி பேட்டரியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அரூர் மாவட்ட வன அலுவலர் சென்பகபிரியா முன் ஆஜர்படுத்தி, அவரது உத்திரவின்படி கைது செய்தனர். மேலும் அரூர் பகுதியில் அதிகப்படியானோர் கள்ளத்துப்பாக்கிகலை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று இதைப்போல் கொளகம்பட்டி காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கள்ளத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago