முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அருகே அமைந்துள்ள செக்கானுர் கதவணை மின் நிலையத்தில் உடைந்த மதகு உடனடியாக சீரமைப்பு: கலெக்டர் .சம்பத், தகவல்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      சேலம்
Image Unavailable

சேலம்,

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே அமைந்துள்ள செக்கானூர் கதவணை மின்நிலையத்தில் 7 – ம் எண் மதகு  உடைப்பானது அவசரகால மதகு பொருத்தி உடனடியாக  சீரமைக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் வா.சம்பத்,  தெரிவித்ததாவது:

மேட்டூர் அருகே அமைந்துள்ள செக்கானூர் கதவணை மின்நிலையத்தில் 7 – ம் எண் மதகு நேற்று (22.12.2016) திடீர்ரென உடைந்ததால் வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி ஆகிய 3 தாலுகாக்களுக்கு உட்பட்ட காவிரி கரையையொட்டி அமைந்துள்ள 9 கிராமங்களில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை மூலம் தண்டோரா மற்றும் ஆட்டோவில் ஒலி பெருக்கி வைத்தும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் உடைப்பு ஏற்பட்ட மதகானது படிப்படியாக 5 துண்டு அவசரகால தடுப்பு மதகு பொருத்தி நேற்றய தினம் இரவு 02.00 மணியளவில் முழுமையாக சீரமைக்கப்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த உடைப்பினால் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் ஏற்படாது. மேலும், மின்னுர்பத்தி எதுவும் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்,  தெரிவித்தார்.

முன்னதாக செக்கானூர் கதவணை மின்நிலையத்தில் மதகு திடீர்ரென உடைந்ததை கலெக்டர் வா.சம்பத்,  நேரில் பார்வையிட்டு மதகு உடைந்ததற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். இதுபோன்ற உடைப்புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள்  மேற்கொள்வது குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

                இந்நிகழ்வின் போது  மேட்டூர் சார் ஆட்சியர் மேகநாதரெட்டி,இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கவிதா, மின்திட்ட கண்காணிப்பு பொறியாளர் வெங்கடேசன், பொதுப்பணித்துறை  செயற்பொறியளார் சுப்ரமணியம், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரவிக்குமார், மின் திட்ட உதவி இயக்குநர்கள் ரவிக்குமார்,  கிருஷ்டீன் செல்வராஜ், மாவட்ட மேலாளர் (பொது) சக்திவேல், மாவட்ட மேலாளர் (நீதியியல்) குமரன், மேட்டூர் வட்டாட்சியர் கிருஷ்ணன், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்