முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 8 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மனூர், கொற்கை, கச்சனம், நெடும்பலம் ஆகிய ஊராட்சிகளில் ரூ. 8 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் பகுதி 10-ன் கீழ் ரூ.2 கோடியே 94 லட்சம் மதிப்பில் அம்மனூர் முதல் கொத்தங்குடி வரை தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கச்சனம் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடியே 82 லட்சம் மதிப்பில் கச்சனம் முதல் மஞ்சாவாடி வரை 4.4 கி.மீ தொலைவிற்கு தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு தரத்தினை ஆய்வு செய்தார்.அதன் பின்னர் திருத்தங்கூரில் ரூ.13 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திலிருந்து ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் 40 மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் கொற்கை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கொற்கை முதல் தலைக்காடு வரை தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம் தெரிவித்ததாவது.... தமிழக அரசு கிராம புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி ரூ.8 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த காலத்திற்குள் தார் சாலை அமைக்கும் பணியினை நிறைவு செய்ய வேண்டும் எனவும், புதிதாக அமைக்கப்படுகிற தார் சாலை தரமானதாகவும், நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.தியாகராஜன், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் வாட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்