முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல திட்டங்களால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 411 பேர் பயனடைந்துள்ளனர்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      ராமநாதபுரம்

ராமநாதபுரம் : தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களால் இதுவரை 10 ஆயிரத்து 411 பேர் சுமார் ரூ.21 கோடி மதிப்பில் பயனடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்திடும் விதமாகவும்,அவர்கள் சுயமாக தன்னம்பிக்கையுடன் சமுதாயத்தில் முத்திரை பதித்திட ஊக்குவித்திடும் வகையிலும் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலம்; 10ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் மொத்தம் ரூ.21.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் 6 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளும், 2 மனநல காப்பகங்களும்,  ஒரு மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்பகால பயிற்சி மையமும், ஒரு உடல் ஊனமுற்றோருக்கான இல்லமும், ஒரு 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  

இதுதவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் அரசு சிறப்பு மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு இதுவரை மொத்தம் 26ஆயிரத்து 721 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட  40 சதவீதம் மற்றும் 40 சதவீதத்திற்கும் அதிகமான மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள், வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாதந்தோறும்  ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.  இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 158 பயனாளிகள் மாதந்தோறும் ரூ.ஆயிரம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களான மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2ஆயிரத்து 940 பயனாளிகளுக்கு ரூ.5கோடியே 42லட்சத்து 52ஆயிரம் மதிப்பிலும், கடும் உடல் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 848 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 55லட்சத்து 34ஆயிரம் மதிப்பிலும், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு ரூ.9லட்சத்து 90ஆயிரம் மதிப்பிலும், தொழுநோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 62 பயனாளிகளுக்கு ரூ.7லட்சத்து 68ஆயிரம் மதிப்பிலும், கை,கால் பாதிக்கப்பட்டோர், பார்வையற்றோர், காது கேளாதோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.4லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 372 பயனாளிகளுக்கு 10லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலும், வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.17ஆயிரம்  மதிப்பிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற காது கேளாத மற்றும் பார்வையற்ற மாணவ, மாணவியருக்கான பரிசுத்தொகை வழங்கும் திட்டத்;தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.65ஆயிரத்து 550 மதிப்பிலும், மீட்புத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.15ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.16ஆயிரம் மதிப்பிலும், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.20ஆயிரம் மதிப்பிலும், சுயதொழில் புரிவோருக்கான வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.4லட்சத்து 70ஆயிரம் மதிப்பிலும், இலவச பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் கீழ் 373 பயனாளிகளுக்கு ரூ.4லட்சத்து 16ஆயிரத்து 410 மதிப்பிலும், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.20லட்சத்து 54ஆயிரத்து 150 மதிப்பிலும், மூன்று சக்கர வண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.32ஆயிரம் மதிப்பிலும், சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.81ஆயிரம்  மதிப்பிலும், சிறப்பு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ.6லட்சம் மதிப்பிலும், நவீன செயற்கை அவயம் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்பிலும், கால்தாங்கி  வழங்கும் திட்டத்தின் கீழ் 10  பயனாளிகளுக்கு ரூ.18,400 மதிப்பிலும், காதொலிக்கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.15லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.2லட்சம் மதிப்பிலும், ஊன்றுகோல் வழங்கும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.10ஆயிரத்து 10 மதிப்பிலும், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும்  திட்டத்தின் கீழ் 5ஆயிரத்து 396 பயனாளிகளுக்கு ரூ.13கோடியே 62லட்சத்து 96ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 10ஆயிரத்து 411 பயனாளிகளுக்கு ரூ.21கோடியே 49லட்சத்து 60ஆயிரத்து 520 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வழங்கும் ஏற்றம் பெறும் விதமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்தகைய நலத்திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை அனுகி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்