முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 25 பேர் காயம் - 2 பேரின் நிலைமை கவலைக்கிடம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை - சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் திரண்டதால் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 25 பேர் காயமடைந்தனர். இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மண்டல பூஜை: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைகளுக்காக கடந்த மாதம் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் மண்டல பூஜைகள் தொடங்கின. 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜைகள் நேற்றுடன் நிறைவடைந்தது. மண்டல பூஜைகளை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். கடந்த வியாழக்கிழமை ஆரண்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி ஊர்வலம் பம்பை வந்தடைந்தது. தங்க அங்கியை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கூடினர்.

கூட்ட நெரிசல்:
தங்க அங்கி மாளிகைபுரம் கோயில் அருகே வந்தபோது பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தடுப்பு கயிறு அறுந்து பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் 25 பேர் காயம் அடைந்ததாகவும், அவர்கள் சன்னிதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பத்தணம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் எனவும், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கேரள போலீசார் தெரிவித்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்