முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மடப்பட்டு கிராமத்தில் குடும்ப அட்டையில் ஆதார் எண் பதிவு: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் மடப்பட்டு கிராமத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலமாக குடும்ப அட்டையில் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கலெக்டர்இல.சுப்பிரமணியன் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும், ஆதார் மற்றும் கைப்பேசி எண் இல்லாத குடும்ப அட்டைகளை போலி (டீழபரள) அட்டை என கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமெனவும், பொதுவாக நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டை வகை யூனிட் கைபேசி எண், ஆதார் எண்கள் தவறாக பதிவு செய்திருந்தால் விற்பனையாளர்கள் மூலம் திருத்தப் பட்டியலில் கையொப்பம் பெறப்பட்டு பின்னர் தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள்)ஃ வட்ட வழங்கல் அலுவலர்கள் திருத்தம் செய்ய வேண்டுமெனவும், ஒரு கடையிலிருந்து மற்றொரு கடைக்கு குடும்ப அட்டை மாற்றம் செய்வது (அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண்களுடன்) வட்ட வழங்கல் அலுவலர்களே செய்து கொள்ளலாம்.  இயந்திரத்தில் பதிவுகள் விடுபட்டுள்ள ஆதார் எண்கள் மற்றும் கைபேசி பட்டியல் தயார் செய்து ஒரு குழு அமைத்து வீடு வீடாக சென்று அவைகளை பெற்று, பதிவு செய்ய வேண்டும்.  முன்னுரிமை குடும்ப அட்டைதாரர் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர் தல விசாரணை செய்து உறுதி செய்யப்பட வேண்டும்.  ஆறு மாதத்திற்கு மேல் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைகளின் செயல்பாட்டினை தல விசாரணை செய்து நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் என கலெக்டர்இல.சுப்பிரமணியன்  துறை சார்ந்த சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கே.ராஜேந்தின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்