முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கலெக்டர் சு.பழனிசாமி நேரில் ஆய்வு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, நேரில் ஆய்வு செய்தார்.

 

ரூ.30 லட்சம்

 

வேதாரண்யம் ஒன்றியம் கத்தரிப்புலம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் "அம்மா உடற்பயிற்சி நிலையம்" அமையவுள்ள இடத்தினையும், செட்டிப்புலம் முதல் அவரிக்காடு வரை குடிநீர்த் தேவைக்காக பைப்லைன் கொண்டு செல்வதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளையும், வாய்மேடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்று நடுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் இளங்கோவன்;, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், ராஜரத்தினம், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்