முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீர்காழி ஒன்றியத்தில் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தோட்டம் மற்றும் திருவாலி ஏரிகளில் ஆய்வு : கலெக்டர் சு.பழனிசாமி, செய்தியாளர்களுடன் சென்றார்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      நாகப்பட்டினம்

சீர்காழி ஒன்றியத்தில் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தோட்டம் மற்றும் திருவாலி ஏரிகளில் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, செய்தியாளர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

செய்தியாளர் பயணம்

 

செய்தியாளர் பயணத்தின் போது, மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தெரிவித்ததாவது,

"சீர்காழி ஒன்றியம் பெருந்தோட்டம் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தோட்டம் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைப்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் விஸ்தரிப்புக் குழாய் மூலம் அருகிலுள்ள கிராமங்களுக்கு குடிநீரை கொண்டு செல்வதன் மூலம், இந்த ஏரிக்கு அருகிலுள்ள தென்னம்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட கீழமூவர்க்கரை, மேல மூவர்க்கரை, கோனையான்பட்டினம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்.

 

ஆழ்துளை கிணறு

 

மேலும், சீர்காழி ஒன்றியம், நெற்பத்தூர், திருநகரி ஆகிய கிராமங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக, திருவாலி ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு திருவாலி ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் விஸ்தரிப்புக் குழாய் மூலம் அருகிலுள்ள கிராமங்களுக்கு குடிநீரை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. திருவாலி ஏரியில் ஆழ்துளை கிணறு அமைப்பதன் மூலம், இந்த ஏரிக்கு அருகிலுள்ள நெற்பத்தூர், திருநகரி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும். இந்த திட்டங்களின் மூலம் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6000 மக்கள் பயனடைவார்கள்" என தெரிவித்தார்..

இந்த செய்தியாளர் பயணத்தின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், வட்டாட்சியர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago